அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹியூஸ்டன் மாநகரில் ரோபோக்கள் துணையுடன் பீட்சாவை டெலிவரி செய்யும் முயற்சி நடைபெற உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் இந்த சேவை துவங்கப்பட உள்ளதாக தெரிகிறது. இதனை டோமினோஸ் பீட்சா மற்றும் ரோபோட்டிக் கம்பெனியான நியூரோவும் இணைந்து மேற்கொள்ள உள்ளது.
இதன் மூலம் பீட்சாவை ஆர்டர் செய்து, அதற்கான கட்டணத்தையும் முன்கூட்டியே செலுத்தினால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் இடத்திற்கு ரோபோக்கள் பீட்சாவை கொண்டு செல்லும். வாடிக்கையாளர்கள் பெற்ற பாஸ்வேர்டை தொடு திரை வசதி கொண்ட ரோபோவில் என்டர் செய்வதன் மூலம் பீட்சாவை டெலிவரியாக பெறலாம். இதற்காக நியூரோவின் R2 என்ற ரோபோவை பயன்படுத்த உள்ளனராம்.
இருப்பினும் இந்த சேவை இப்போதைக்கு குறிபிட்ட சில நாட்களில் மட்டுமே வெள்ளோட்டம் பார்க்க உள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.