டெக்

மெமரி கார்டான டிஎன்ஏ... பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவை பதிவு

மெமரி கார்டான டிஎன்ஏ... பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவை பதிவு

webteam

உயிருள்ள பாக்டீரியாவின் டிஎன்ஏவில் வீடியோவைப் பதிவேற்றி ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

அமெரிக்காவின் போஸ்டன் நகரிலுள்ள ஹார்வார்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த சாதனையை செய்துள்ளனர். இதன்மூலம் மனிதனின் நினைவலைகளை டிஎன்ஏ மூலக்கூறுகள் மூலம் பெறலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிஆர்ஐஎஸ்பிஆர் (CRISPR) ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1870களில் எடுக்கப்பட்ட குதிரை ரேஸ் குறித்த வீடியோ பதிவை பாக்ட்ரீயாவின் டிஎன்ஏவில் பதிவேற்றம் செய்ததுடன், அதனை வெற்றிகரமாக தரவிறக்கம் செய்தும் விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய விஞ்ஞானி சேத் ஷிப்மேன், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றை மூலக்கூறுகளில் சேமிப்பது சிறப்பானதாக இருக்கும். டிஎன்ஏ மூலக்கூறுகளை வரலாற்று ஆய்வாளர்களாக மாற்றும் ஒரு முயற்சியே எங்களது ஆய்வு என்று தெரிவித்தார். இந்த தொழில்நுட்பம் மூலம் மனித மூளையில் உள்ள டிஎன்ஏக்கள் மூலம் நினைவலைகளை வீடியோ பதிவாகப் பார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.