டெக்

2022-இல் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் ஸ்மார்ட்போன்களின் விவரம்

2022-இல் இந்தியாவில் விற்பனைக்கு வர தயாராகும் ஸ்மார்ட்போன்களின் விவரம்

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத சாதனமாக மாறி நிற்கிறது ஸ்மார்ட்போன்கள். ஒவ்வொரு பயனரின் தேவைக்கு ஏற்ப தனது பணியை இந்த போன்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில் வரும் 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் போன்கள் குறித்து பார்க்கலாம். 

உலக அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் தட்டுப்பாடு காரணமாக முன்னணி நிறுவனங்கள் சந்தையில் 2021-இல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த போன்களை அறிமுகம் செய்ய முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2022-இன் தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் போன்களின் விவரம். 

சாம்சங் கேலக்ஸி S22 சீரிஸ் மற்றும் கேலக்ஸி S21 FE, ஒன்பிளஸ் 10 சீரிஸ், சியோமி 12 சீரிஸ், ஐபோன் 14 சீரிஸ் மற்றும் ஐபோன் SE 3, விவோ X80 சீரிஸ், கூகுள் பிக்ஸல் 6A மாதிரியான ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் உறுதுணை : Techradar