டெக்

ஐ போனை முடக்கிய 'ஞா' எழுத்து..!!!

webteam

'ஞா' என்று தெலுங்கு மொழியில் இருக்கும் ஒரே ஒரு எழுத்து உலகம் முழுவதும் உள்ள ஐபோன்களை செயலிழக்கச் செய்து வருகிறது. அந்த எழுத்தை கணினியில் அவ்வளவு எளிதில் டைப் செய்ய முடியாது, அதற்காக சில அப்ளிகேஷனை பயன்படுத்தி டைப் செய்யலாம். தற்போது இந்த எழுத்தை ஐபோனுக்கு மெசேஜாக அனுப்பினால் போதும் உடனே அந்த ஐபோன் செயலிழக்கும். 

ஐ போனில் உள்ள வாட்ஸ் அப், ஹைக், இமெயில் போன்றவற்றிலும் இதே நிலைதான். அதாவது இந்தத் தெலுங்கு எழுத்தை ஒருவருக்கு அனுப்பினால் அந்த மெசேஜைப் பெறுபவர் பிறகு அந்த அப்ளிகேஷனை திறக்கவே முடியாது. உதாரணமாக வாட்ஸ் அப் மூலம் இந்த எழுத்தை ஒருவர் உங்களுக்கு அனுப்பினால், நீங்கள் அந்த அப்ளிகேஷனை திரும்ப பயன்படுத்தவே முடியாது. இந்த விபரீதம் ஐபோனில் எப்படி பரவ ஆரம்பித்தது என்று தெரியாமல் ஆப்பிள் நிறுவனம் குழப்பத்தில் உள்ளது. இந்தத் தெலுங்கு எழுத்து ஐபோனை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் பீதியை கிளப்பியுள்ளது.