டெக்

2021 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது? - வெளியான தகவல்

2021 ஆம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது? - வெளியான தகவல்

EllusamyKarthik

2021-ஆம் ஆண்டில் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது தன்னார்வ நிறுவனமான Consumer Reports. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் எது சிறந்த போன் என்பதை பல்வேறு சோதனைகள் மற்றும் பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். 

சிறந்த பேட்டரி, சிறந்த கேமரா, கட்டுப்படியாகின்ற விலை என்ற அடிப்படையில் இது வகைபடுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதில் ஐபோன் 12 புரோ மேக்ஸ் போன் தான் ஐபோன் வகைகளில் இந்த ஆண்டுக்கான சிறந்த போன் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட போன்களில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி சிறந்த போன் என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறந்த பட்ஜெட் ரக போனாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்த் என்10 5ஜி குறிப்பிடப்பட்டுள்ளது.