மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர் அம்பானி பேசுவது போன்ற போலியான வீடியோவை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் 33 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாக நீலகிரி காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வந்த வீடியோவில் முதலீடு குறித்து பேசியதை நம்பி, பல்வேறு கட்டங்களாக அவர் பணத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் பணம் உத்தர பிரதேசத்தில் உள்ள வங்கி கணக்குகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பணத்தை மீட்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.