டெக்

“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு

“சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் அசத்தல் கேம்” - புதிய கண்டுபிடிப்பு

webteam

மனிதர்கள் சர்க்கரை சாப்பிடும் அளவை குறைக்கும் வகையில் புதிய கம்யூட்டர் கேம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் பெரும்பாலான நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது சர்க்கரை தான். நேராடியாக நாம் சாப்பிடும் வெள்ளைச்சக்கரை உடலில் கலோரிகளாக மாறி உடல் எடையை அதிகரிக்க செய்கின்றது. அதுமட்டுமின்றி கேன்சர் உட்பட பல நோய்களுக்கு சர்க்கை உணவுகள் அதிகம் சாப்பிடுவது காரணமாக அமைவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்பவர்களுக்கு முதலில் அறிவுறுத்தப்படும் ஒன்றாக சர்க்கரை கட்டுப்பாடு உள்ளது.

இந்நிலையில் மனிதர்கள் சர்க்கரை சாப்பிடுவதை குறைக்கும் வகையில் புதிய கம்யூட்டர் கேம் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது அந்த கேம் சோதனை முறை ஆய்வில் உள்ளது. இந்த கம்ப்யூட்டர் கேம்-ஐ சோதிப்பதற்காக சர்க்கரை உணவு அதிகம் சாப்பிடும், அதிக உடல் எடை கொண்ட 109 பேரை விளையாட வைத்துள்ளனர். இந்த கேம்மில் அவர்கள் சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் உடலில் உண்டாகும் பிரச்னைகள் குறித்து, அவற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் டிசைன் செய்துள்ளனர். 

கிராபிக்ஸ் மற்றும் வண்ணமயத்துடன் கொண்ட இந்த கேமை விளையாடிய அந்த நபர்கள் தாமாகவே சர்க்கரை சாப்பிடுவதை குறைத்துக்கொண்டது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்களின் மூளைக்கு குறைந்த அளவு சர்க்கையை சாப்பிட வேண்டும் என இந்த கேம் பயிற்சி அளித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களை முடக்கி உடல்நலனை கெடுக்கும் கேம்களை பார்த்ததால், அதே கேம் மூலம் மனிதர்களின் உடல்நலனை மேம்படுத்த இப்படி ஒரு கேம்-ஐ உருவாக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.