இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உலகின் உயரமான டெலஸ்கோப்பினை சீனா நிறுவ உள்ளது.
இதற்காக கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை சீனா வகுத்துள்ளது. திபெத் மலைப்பகுதியில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி கடல் மட்டத்தில் இருந்து 5,250 அடி உயரத்தில் அமைய உள்ளது. என்கரி 1 (Ngari 1) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி மூலம் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களையும், புவியீர்ப்பு அலைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொலைநோக்கி 2021ம் ஆண்டு முதல் உபயோகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல மேலும் ஒரு தொலைநோக்கியை கடல்மட்டத்தில் இருந்து 6,000 மீ. உயரத்தில் அமைக்கவும் சீனா முடிவு செய்துள்ளது. விண்வெளியில் உயிரினங்கள் வாழ்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக கின்சூ மாகாணத்தில் 4,450 பேனல்களால் ஆன 30 கால்பந்து மைதானங்கள் அளவு கொண்ட உலகின் பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.