பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி இல்லாமல் இந்திய வரைபடத்தினை காட்டி சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத் தயாரிப்பான ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட் போன் அறிமுக விழாவில் இந்தியாவின் தவறான வரைபடம் காட்டப்பட்டுள்ளாது. இந்த நிகழ்ச்சியில் வீடியோ பதிவு ஒன்று காட்டப்பட்டது. அந்த வீடியோ பதிவில் காட்டப்பட்ட இந்திய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாதது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் கடைகளில் ஜூன் 27 முதல் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.