டெக்

நள்ளிரவில் நிலவில் இறங்கும் ‘சந்திராயன் 2’ - இரவு முழுவதும் புதிய தலைமுறை நேரலை

webteam

நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்குகிறது.

கடந்த ஜுலை 22ஆம் தேதி ‘சந்தியான் 2’ விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் சுற்றிவருகிறது. இது நள்ளிரவு 1.30 மணிக்கு எந்நாட்டின் விண்கலமும் சென்றிராத நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. 

இதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 70 மாணவர்கள், பிரதமர் மோடியுடன் அமர்ந்து சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை காண்கின்றனர்.

இதுதொடர்பாக இன்று இரவு 10.00 மணி முதல் புதிய தலைமுறையில் தொடர் நேரலை ஒளிபரப்பாகவுள்ளது. இதில் விஞ்ஞானிகளும், விண்வெளி ஆர்வலர்களும் பங்கேற்கவுள்ளனர். மேலும் பல பிரத்யேக தகவல்களை புதிய தலைமுறை வழங்கவுள்ளது.