டெக்

`இதுவரை 348 சீன செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன’- மத்திய அமைச்சர் தகவல்

நிவேதா ஜெகராஜா

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கைபடி 348 சீன செயலிகள் இந்தியாவில் முடக்கப்பட்டதாக மத்திய மின்னணுத்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

`இந்தியாவில் செல்போன்களில் பயன்படுத்தப்படும் செயலிகள் மூலமாக தரவுகள் திருடப்பட்டுள்ளதா?' என நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அதில் ‘348 சீன செயலிகள் இந்தியாவில் உள்ள தரவுகளை திருடியுள்ளது; மத்திய உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மேற்கண்ட 348 செயலிகளை இந்தியாவில் பயன்பாட்டிற்கு தடை செய்ததது. ஏற்கெனவே அவற்றின் பயன்பாட்டை முடக்கியுள்ளது’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு ஒருமைப்பாட்டை மீறக்கூடிய வகையில் இத்தகைய செயலிகளின் செயல்பாடு அமைந்ததன் காரணமாக மத்திய அரசு அந்த செய்திகளை முடக்கியதாகவும், 348 செயலிகள் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டவை எனவும் மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.