டெக்

செல்போன் கதிர்களால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை; ஆய்வில் தகவல்

webteam

செல்போன் சிக்னல்களைக் கடத்தும் கதிர்களால் மனிதர்களுக்குப் பாதிப்பில்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

செல்போன் சிக்னல்களைக் கடத்தும் கதிர்களால் மனிதர்களுக்குப் புற்றுநோய் அபாயம் என பல வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பெருமூச்சு விட வழி செய்துள்ளது ஒரு புதிய ஆய்வு. செல்போன் சிக்னல்களைக் கடத்தும் கதிர்களால் மனிதர்கள் உட்பட அனைத்து வகையான உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என வாஷிங்டனில் உள்ள WJLA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகளவு செல்போன் ரேடியேசனை உருவாக்கி அதனுள் ஆண் எலியை வளர்த்துள்ளனர். ஒருநாள் ஒன்றுக்கு சுமார் 9 மணிநேரம் அந்த ஆண் எலி சோதனை அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. அறையினுள் 2G மற்றும் 3G கதிர்கள் தொடர்ச்சியாக செலுத்தப்பட்டுள்ளன. அப்போது எலிக்கு இதயத்தில் சிறு கட்டி வளர்ந்துள்ளது. கதிர்களின் செறிவு அதிகமாக இருந்தமையினாலேயே இவ்வாறு கட்டி உருவாகியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆய்வின் முடிவில், Axios வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மனிதர்கள் வழக்கமாக தங்கள் செல்போன்களைப் பயன்படுத்தும்போது கதிர்களின் அளவு குறைவாக வெளியேறுவதனால் மனிதர்களைப் பாதிக்காது என தெரிவித்துள்ளனர். இதனால் மனிதர்களுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ புற்றுநோய், டிஎன்ஏ பாதிப்பு ஏற்படாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.