டெக்

யோகா தின அனுபவத்தைப் பகிர 'ஆப்'

யோகா தின அனுபவத்தைப் பகிர 'ஆப்'

webteam

'சர்வதேச யோகா தினம்' நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி, பொதுமக்கள் யோகா தின அனுபவங்கள், செயல்பாடுகளை பகிர்வதற்காக, 'செலிப்ரேட்டிங் யோகா' என்னும் மொபைல் ஆப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சர்வதேச யோகா தினமான ஜூன் 21 அன்று, பொது இடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் என நாடு முழுவதும் அனுசரிக்கப்பட இருக்கும் யோகா தின செயல்பாடுகளைப் பகிர்வதற்காக இந்த அப்ளிகேஷன் தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

யோகா தினம் முடிந்த பிறகும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். யோகா மற்றும் தியானத்தின் பின்னுள்ள அறிவியல் என்னும் நிகழ்ச்சியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சக வலைதளத்தில் நடத்தி வருகிறது. இதில், யோகாவின் பயன்கள் என்னும் தலைப்பில், பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஆய்வு குறித்த தகவல்களையும் இந்த அப்ளிகேஷன் வழியாக அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.