டெக்

வோடஃபோனின் ரூ.900 வரையிலான கேஷ்பேக் ஆஃபர்கள்

வோடஃபோனின் ரூ.900 வரையிலான கேஷ்பேக் ஆஃபர்கள்

webteam

பிரபல முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடஃபோன் நிறுவனம் தற்போது லாவாவுடன் இணைந்து 900ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

ஜியோவின் வருகைகக்கு பின் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக இலவச வாய்ஸ்கால்ஸ், டேட்டா உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில். பிரபல முன்னணி டெலிகாம் நிறுவனமான வோடஃபோன் லாவாவுடன் இணைந்து 900ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட சில மாடல்களான லாவா ஃபீச்சர் ஃபோன்களை வாங்கும் வோடஃபோன் வாடிக்கைாயளர்கள், மாதந்தோறும் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து, 50 ரூபாயை கேஷ்பேக் ஆஃபரில் பெறலாம். இந்த சலுகை 18 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது லாவாவின் ஃபீச்சர் ஃபோன்களான, ARC 101, ARC 105, ARC One Plus, KKT 9s, KKT Pearl, KKT 34 Power, KKT 40 Power+, Captain K1+, மற்றும் Captain N1 உள்ளிட்ட குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும். வோடஃபோனின் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம்.