டெக்

டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் கார்

webteam

கார் ஓட்டும்போது டிரைவருக்கு மாரடைப்பு வந்தால் கண்டறியும் தொழில்நுட்பவசதியை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் வாகன விபத்துகள் தடுக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கார் ஓட்டும் நபருக்கு ஏற்படும் உடல் ரீதியிலான பிரச்னை அவரை மட்டுமின்றி சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும் பாதிக்கும். எனவே ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா, ஆய்வாளர்களுடன் இணைந்து ஓட்டுநரின் மனநிலையை உணர்ந்து எச்சரிக்கை செய்யும் வசதியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

உயர் அழுத்த எலெக்ட்ரோ கார்டியோகிராம் (ஈ.சி.ஜி.) மற்றும் பல மருத்துவ அளவீடுகளை வைத்து ஓட்டுநரின் மனநிலையை கார் உணரும் என்று அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் கேவ்யன் நஜாரியன் கூறுகிறார். இந்த ஆய்வாளர் குழு 2020 ஆம் ஆண்டு இந்த சோதனையை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.