டெக்

1000 mbps வேகத்தில் இணையதள வசதி - பிஎஸ்என்எல் அதிரடி

1000 mbps வேகத்தில் இணையதள வசதி - பிஎஸ்என்எல் அதிரடி

webteam

1,000 mbps  பதிவிறக்க வேகத்துடன் கூடிய அதிவேக இணையதள சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா மும்பையில் இத்திட்டத்தை தொடக்கிவைத்தார். இத்திட்டம் மாநில தலைநகரங்கள் உள்ளிட்ட 100 நகரங்களில் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டம் 330 கோடி ரூபாய் செலவில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.