டெக்

ஜியோவை மிஞ்சும் ‘பிரிபெய்டு பிளான்’ - அள்ளித்தரும் பிஎஸ்என்எல் ஆஃபர்

webteam

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களது 2 பிரிபெய்டு பிளான்களை புதுப்பித்து வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஜியோ வந்த பின்னர் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில பின்னடைவை சந்தித்தன. அதன் எதிரொலி அனைத்து வாடிக்கையாளர்களிடமும் தெரிந்தது. நீண்ட நாட்களாக ஒரே சிம் கார்டை பயன்படுத்தி வந்தவர்கள் கூட, டேடா மற்றும் போன் பேசுவதற்காக ஜியோ சிம் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அம்பானியின் அதிரடி ஆஃபரே இதற்கு காரணம். 

டேடாக்களை இலவசமாக அள்ளிக்கொடுத்து அதன்மூலம் வாடிக்கையாளர்களை பிடித்தவர் அம்பானி. இன்னும் அவரது ஆஃபர்களில் இருந்து வாடிக்கையாளர்களால் மீளமுடியவில்லை. தற்போதும் குறைந்த விலைக்கு டேடா கிடைக்கிறது என ஜியோவை கோடிக்கணக்கானோர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜியோவின் இரண்டு பிரிபெய்டு பிளான்களை மிஞ்சுவதற்காக, பிஎஸ்என்எல் தங்களின் இரண்டு பிளான்களை புதுப்பித்துள்ளது. அதன்படி ரூ.47 மற்றும் ரூ.198 என்ற தொகைக்கு வழங்கப்பட்டு பிரெய்டு பிளான்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ரூ.47க்கு அன்லிமிடெட் லோகல் போன் மற்றும் மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளின் சுற்றுவட்டாரங்களில் அன்லிமிடெட் எஸ்டீடி போன் சேவை இதுவரை 11 நாட்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.47க்கு அன்லிமிடெட் லோகல் மற்றும் தேசிய அளவிலான எஸ்டீடி போன் சேவையுடன், 1 ஜிபி டேடாவும் வழங்கப்படுகிறது. ஆனால் கால அவகாசம் 9 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று ரூ.198க்கு 1.5 ஜிபி டேடா என 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட அளவு டேடா பயன்படுத்திய பிறகு, வேகம் குறையும் என்ற வகையில் சேவை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.198க்கு 2 ஜிபி டேடாவும், அன்லிமிடெட் லோகல் மற்றும் எஸ்டிடி போன் சேவையும் 54 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோவில் ரூ.53க்கு 1.5 ஜிபி டேடா, அன்லிமிடெட் போன் சேவை மற்றும் 70 எஸ்.எம்.எஸ்கள் 7 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. ரூ.198க்கு 2 ஜிபி டேடா, 100 எஸ்.எம்.எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் போன் சேவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.