டெக்

ஐபோன் 12 பாக்ஸ் உடன் சார்ஜர் வைக்க தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம்

EllusamyKarthik

ஐபோன் 12 பாக்ஸில் அந்த போனுக்கான சார்ஜரை வைக்கத் தவறியதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது பிரேசில் நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு முகமை. Procon-SP எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு முகமை தான் ஆப்பிளுக்கு இந்த அபராதத்தை போட்டுள்ளது. “தவறான விளம்பரம், விற்பனையில் நியாயம் என்பதே இல்லாமல் சார்ஜரை வைக்காமல் போனை விற்பனை செய்தது தவறு” என சொல்லி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

“பிரேசிலில் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டத் திட்டங்களை பின்பற்றி வருவதை ஆப்பிள் நிறுவனம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். ஐபோன் 12இல் சார்ஜர் வைக்காததால் அதன் விலையில் மாற்றம் உள்ளதா? என்ற கேள்விக்கும் ஆப்பிள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை” என அந்த முகமை தெரிவித்துள்ளது. 

கடந்த அக்டோபரில் வெளியான ஐபோன் 12இல் சார்ஜர் மற்றும் ஹெட்போன் இருக்காது என சொல்லியிருந்தது. மின் கழிவுகளை குறைக்கும் நோக்கில் ஆப்பிள் இதை செய்வதாக தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.