டெக்

சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் மீது காப்புரிமை வீதி மீறல் புகாரில் வழக்குப்பதிவு

EllusamyKarthik

பாலிவுட் சினிமா இயக்குனரும், தயாரிப்பாளருமான சுனில் தர்ஷன் தயாரித்து, இயக்கியிருந்த ‘ஏக் ஹசீனா தீ ஏக் தீவானா தா’ என்ற திரைப்படம் யூடியூப் தளத்தில் தனது சம்மதமின்றி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லி கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் மீது காப்புரிமை விதிமீறல் புகார் அளித்தார். 

’நான் யாருக்கும் எனது படத்தை விற்கவில்லை’ என அவர் தனது புகாரில் சொல்லியுள்ளார். அந்த புகாரை அடுத்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

அது குறித்து யூடியூப் தளத்திற்கு பலமுறை புகாரளித்தும் தனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் சொல்லியுள்ளார் சுனில் தர்ஷன். கடந்த 2017-இல் இந்த படம் வெளியாகி இருந்தது.

சுந்தர் பிச்சைக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.