டெக்

பறக்கும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ

பறக்கும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ

webteam

லீகோ நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மோட்டார் சைக்கிளைத் உருவாக்குவதற்கான ஆய்வுகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஹெலிகாப்டரை அடிப்படையாகக் கொண்டு பறக்கும் கார்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபாடு காட்டி வருகின்றன. இந்தநிலையில், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. லீகோ (LEGO) நிறுவனம் வடிவமைத்துள்ள மினியேச்சர் பறக்கும் சூப்பர் பைக்குகளை அடிப்படையாகக் கொண்டு பிஎம்டபிள்யூவின் எவர்க்ரீன் மாடலான பிஎம்டபிள்யூ ஆர் 1200 ஜிஎஸ் (BMW R 1200 GS) பைக்குகளை பறக்கும் வகையில் வடிவமைப்பது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக லீகோ மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த பறக்கும் மோட்டார் சைக்கிள்களின் மினியேச்சர் மாடல் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.