2075ல் ஆப்பிள், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் வளரும் என ஆப்பிள் நிறுவன இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்நியாக் தெரிவித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற அவர், 1911ல் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎம் நிறுவனத்தைப் போல, ஆப்பிள் நிறுவனம் நெடு நாட்களுக்கு நீடித்து நிற்கும் என்றார். கடந்த நிதியாண்டுக் கணக்குப் படி ஆப்பிள் நிறுவனத்தின் கையிருப்பு, 246.1 பில்லியன் டாலர்கள். (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் கோடிகள்). ஆப்பிள் தற்போதுள்ள நிலையில் எந்தத் துறையில் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். 2075ல் இந்த நிறுவனம் பிரம்மாண்டமாக வளரும். அதைப் போலவேதான் கூகுளும் பேஸ்புக்கும் என்று ஸ்டீவ் வோஸ்நியாக் கூறியுள்ளார்.
ஸ்டீவ் வோஸ்நியாக் எதையும் முன் கூட்டியே கணித்து விடுபவர் என்றும், அவரது கணிப்புகள் பெரும்பாலும் தவறுவதில்லை என்றும் பெயரெடுத்தவர். இவர்தான் வருங்காலத்தில் லேப்டாப்புகள் பெரிய அளவில் வளரும் என, கடந்த 1981ல் கணித்துச் சொன்னவர்.