இதுவரை நீங்கள் சாதித்தது சாதாரண விஷயம் அல்ல என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.
நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று அதிகாலை நடைபெற்றது. நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் இருந்தப் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோவின் பெங்களூரு மையத்தில் இருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளிடம் உறையாற்றினார். அப்போது, “இதுவரை நாம் சாதித்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. தைரியமாக இருங்கள். வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் உண்டு. நீங்கள் நாட்டிற்கு மிகப் பெரிய சேவையை ஆற்றியுள்ளீர்கள். நான் எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன். நீங்கள் தைரியமாக இருங்கள்” என ஆறுதல் தெரிவித்தார்.