டெக்

’Battlegrounds Mobile India’ பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் ஜூன் 18இல் அறிமுகம்?

’Battlegrounds Mobile India’ பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் ஜூன் 18இல் அறிமுகம்?

EllusamyKarthik

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’ , பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவின் பப்ஜி மொபைல் கேம் வெர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த மொபைல் கேம் வரும் 18 ஆம் தேதி அன்று அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லையெனில் இந்த மாதத்திற்குள் அது அறிமுகமாகலாம் என தெரிகிறது. 

இந்த கேமுக்கான முன்பதிவு கடந்த மே 18 அன்று ஆரம்பமானது. அப்போது முதலே இந்த கேமின் தீவிர ரசிகர்கள் அதன் வெளியீட்டு தேதியை எதிர்பார்த்து வருகின்றனர். 

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமல்லாது www.battlegroundsmobileindia.com என்ற வெப்சைட்டிலிருந்தும் நேரடியாக இந்த கேமின் APK அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விளையாட்டு செய்திகளை வெளியிடும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்போதைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இந்த அப்ளிகேஷன் வெளியாகிறது. விரைவில் ஆப்பிள் போன் பயனர்களுக்கும் அறிமுகமாகும் என தெரிகிறது. 

கடந்த ஆண்டு நாட்டின் பாதுகாப்பு கருதி சீனா செயலிகளுக்கு தடை விதித்த போது PUBG மொபைல் கேமும் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கேமின் பிரியர்கள் தங்களிடம் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளது கிராப்டான் நிறுவனம்.