டெக்

’Battlegrounds Mobile India’: பப்ஜி மொபைல் கேமின் புது வெர்ஷனுக்கும் தடை விதிக்க கோரிக்கை

EllusamyKarthik

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’, பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவின் பப்ஜி மொபைல் கேம் வெர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த கேமுக்கு தடைவிதிக்க வேண்டும் என அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் நினோங் எரிங், பிரதமர் மோடிக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார். 

இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த செப்டம்பரில் தடை விதித்தது இந்திய அரசு. அதில் பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த Battlegrounds Mobile India கேமுக்கு இந்தியாவில் முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது. இந்த கேம் என்று லான்ச் ஆகிறது என்பது வெளியாகவுள்ள நேரத்தில் தான் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 

“இந்த கேம் முழுவதும் இந்திய சட்டத்திற்கு புறம்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களையும், அரசினையும் ஏமாற்றும் வேலையை வடிவமைப்பாளர்கள் செய்துள்ளனர்” என எம்.எல்.ஏ நினோங் எரிங் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனமான டென்சென்ட் Battlegrounds Mobile India கேம் மூலம் மீண்டும் இந்தியாவுக்குள் வர முயலுவதாகவும். இந்த நிறுவனம் பப்ஜி கேமில் பெருமளவு முதலீடு செய்திருந்ததாகவும் எம்.பி அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு எழுப்பி உள்ளதாகவும் தகவல் வந்துள்ளன. அதன் அடிப்படையில் இந்த இரண்டையும் இந்திய அரசு பரிசீலனை செய்திகள் Battlegrounds Mobile India கேமிற்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.