டெக்

‘Wear N’ Play’ பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்த தனியார் வங்கிகளின் புதிய சாதனம்!

EllusamyKarthik

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர ஆயத்தமாகி வருகின்றன இந்திய வங்கிகள். அதில் ஒன்றுதான் ‘Wear N’ Play’ டிவைஸ். ஆக்ஸிஸ் வங்கி இதனை அறிமுகம் செய்துள்ளது. 

“இதன் மூலம் எளிதில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். வழக்கமான டெபிட் காரட் எப்படி செயல்படுகிறதோ அதே போல தான் இதுவும் செயல்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வணிகர்கள் இடத்தில் கான்டெக்ட்லெஸ் (contactless) பேமெண்ட்களை மேற்கொள்ளலாம்” என ஆக்ஸிஸ் வங்கி தெரிவித்துள்ளது. 

வாட்ச் லூப், பேண்ட் மற்றும் கீ செயின் என மூன்று வேரியண்டுகளில் இந்த ‘Wear N’ Play’ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஆக்ஸிஸ். இந்த கான்டெக்ட்லெஸ் பேமெண்ட் மூலம் அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக எஸ்பிஐ டைட்டன் நிறுவனத்துடன் இணைந்து இதே மாதிரியான ஒரு சாதனத்தை கொண்டு வந்திருந்தது. இருந்தாலும் இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலை கொண்டுள்ளனர் பயனர்கள்.