டெக்

இந்திய சந்தையில் அறிமுகமாகும் Asus ROG 5s மற்றும் 5s ப்ரோ... ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

EllusamyKarthik

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அஸுஸ் நிறுவனத்தின்  ROG போன் 5s மற்றும் ROG போன் 5s ப்ரோ வரும் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய நேரப்படி பகல் 12 மணி அளவில் வெர்ச்சுவல் நிகழ்வு மூலம் இந்த போன் அறிமுகமாகும் என GSM Arena தெரிவித்துள்ளது. 

இரண்டு போன்களும் ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. இதில் ROG போன் 5s மாடலில் RGB லைட் பேக் கவரை கொண்டுள்ளது. அடுத்த மாடல் போனில் PMOLED டிஸ்ப்ளே மற்றும் டச் சென்சார் மாதிரியானவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு 11-இல் இயங்கும் இந்த போன் 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 888+ SoC, 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி, 24 மெகா பிக்சல் கொண்ட பிராண்ட் கேமரா, 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, டைப் சி போர்ட், 5ஜி சப்போர்ட் மாதிரியானவை இடம் பெற்றுள்ளன.