டெக்

ராக்கெட்டில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

ராக்கெட்டில் கோளாறு; உயிர் தப்பிய வீரர்கள்

webteam

விண்வெளிக்கு புறப்பட்ட ரஷ்ய ராக்கெட்டில் திடீரென தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அதிலிருந்த இரு வீரர்களும் அவசரமாக தரையிறங்கி உயிர் தப்பினர்.

கஜகஸ்தானில் இருந்து ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யாவின் அலெக்சே ஓவ்சீனின், அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் பயணமானார்கள். புறப்பட்ட 90 விநாடிகளில், மணிக்கு 6 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த ராக்கெட்டில், கோளாறு ஏற்பட்டதை இருவரும் அறிந்துள்ளனர்.

உடனடியாக சுதாரித்த அவர்கள், பேலிஸ்டிக் எனப்படும் அவசர கால இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக வெளியேறினர். 

தரையிறங்கிய இருவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மிகவும் பாதுகாப்பான ராக்கெட் என கூறப்பட்டு வந்த பழைமையான சோயுஸ் ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள இக்கோளாறு, ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.