டெக்

எந்த விஸ்கி பெஸ்ட்? ருசி பார்க்குது செயற்கை நாக்கு!

webteam

ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள், 'செயற்கை நாக்கு' ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த நாக்கு ஸ்காட்டிஷ் மால்ட் விஸ்கி மற்றும் ஒரு ஐரிஷ் கலப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க உதவுமாம்.

ஜெர்மனி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த செயற்கை நாக்கின் மூலம், பல்வேறு தரத்தை கொண்ட விஸ்கியின், பிராண்ட், எத்தனை வருட பழமையானது, எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்க முடிகிறது. இதன் மூலம் போலி விஸ்கிகளை அறிந்துகொள்ளலாம். 
போலி மதுபானங்களை கண்டுபிடிப்பதில், மற்றவைகளை விட இது மலிவானதாகவும், மிகவும் விரைவான முறையில் செயல்படக்கூடியதாகவும் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விஸ்கியில் கலந்துள்ள ரசாயன கலவைகளையும், அதன் விலைகளையும் புதிய செயற்கை நாக்கு அடையாளம் காண்பிக்கிறது.