டெக்

தோல் புற்றுநோயை இனி தானாகவே கண்டறியலாம்..!

தோல் புற்றுநோயை இனி தானாகவே கண்டறியலாம்..!

webteam

தோல் புற்று நோயை மருத்துவர்கள் உதவி இன்றி நாமே சோதனை செய்து கண்டு பிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆரம்ப நிலையிலே துல்லியமான முறையில் தோல் புற்றுநோயைக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்கியுள்ளனர். மருத்துவர்கள் உறுதி செய்வதை விட துல்லியமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நோயை கண்டறிந்து உறுதிசெய்கிறது. இதனை ஸ்மார்ட்போன்களிலே பொருத்தி அவரவர் தானாகவே பரிசோதிக்கலாம்.

இன்று மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்று புற்றுநோய். தோல்ப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மூளைப்புற்றுநோய் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வை விட அதனை கண்டறிவதற்கான பரிசோதனை ஆய்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.