ஆப்பிள் ஐஃபோன் பனிரெண்டு மாடல்களில் இடம்பெற்றுள்ள காந்தஈர்ப்பு சார்ஜிங் முறையால் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இதயவியல் சங்கத்தின் பத்திரிகையில் இது வெளியாகியுள்ளது. மேக்சேஃப் என்ற பெயரில் ஐஃபோன் பனிரெண்டில் இடம்பெற்றுள்ள காந்தஈர்ப்பு சார்ஜிங் முறையால் நாளடைவில் உயிர்காக்கும் சிகிச்சையைப் பெற நேரிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதய சிகிச்சைக்கான பேஸ்மேக்கர் உள்ளிட்ட மின்னணு காந்தவியல் கருவிகளின் செயல்பாட்டில் இந்த மாடல் ஐஃபோனின் சார்ஜிங் முறை குறுக்கிடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அளவீட்டில் 10 புள்ளிகள் இருந்தாலே, இதய நோய் கருவிகளின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படலாம் என்ற நிலையில், ஐஃபோன் பனிரெண்டு மாடலின் காந்தவியல் 50 புள்ளிகளாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.