ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸில் 48 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8K ரெஸலுஷனில் வீடியோ எடுக்கவும் இந்த 14 சீரிஸ் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த அம்சம் 2022-இல் வெளியாகும் ஆப்பிள் போன்களில் மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக உள்ள ஐபோன் 13 சீரிஸ் மாடலில் வழக்கம்போல 12 மெகா பிக்ஸல் கேமரா மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது.
சந்தையில் நிலவும் போட்டியை சமாளிப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் மனங்களை குளிர செய்யவும் ஆப்பிள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாம். அதே நேரத்தில் இந்த முடிவில் ஆப்பிள் மாற்றம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022-இல் வெளியாகும் ஐபோன்களில் மினி சீரிஸ் இடம் பெற வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆப்பிள் நிறுவன ஆய்வாளர் மிங் சி குவோ ஆப்பிள் இன்சைடர் வழியாக தெரிவித்துள்ளார்.