நட்சத்திர கூட்டம்
நட்சத்திர கூட்டம் nasa
டெக்

புதிய சூரிய குடும்பம் ’HD110067’, அதனை சுற்றி வரும் கோள்கள் பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள்!

Jayashree A

இஸ்ரோவிலிருந்து செலுத்தப்பட்ட ஆதித்யா L1 விண்கலம் சூரியனைப் பற்றிய பல ஆராய்சிகளை செய்துக் கொண்டிருந்தாலும், சூரிய குடும்பமானது எப்படி உருவாகிறது? இந்த சூரிய குடும்பத்தைப்போல வேறு குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா என்று அறிவியல் ஆய்வாளர்கள் பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், டிராபிஸ்ட் தொலைநோக்கியின் உதவியால் புதிய சூரிய குடும்பம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதற்கு டிராபிஸ்ட் குடும்பம் என்று பெயரிட்டனர். இந்த டிராபிட் குடும்பத்தைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

இந்நிலையில், டிராபிஸ்ட் குடும்பத்தைப்போல இன்னொரு சூரிய குடும்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு பெயர் HD110067 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானி மற்றும் அறிவியல் ஆய்வாளரான Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada இவர் நமக்கு அளித்த விளக்கம் என்ன என்பதை பார்க்கலாம்.

Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada

”நாம் ஏற்கனவே பார்த்த டிராபிஸ்ட் குடும்பத்தைப்போல விஞ்ஞானிகள் மேலும் ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரத்திற்கு HD110067 என்றும் பெயரிட்டுள்ளனர். இந்த HD110067 நட்சத்திரமானது நமது சூரிய குடும்பத்திலிருந்து 100 ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது. (ஒரு ஒளியாண்டு என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தூரம்). இந்த HD110067 புதிய நட்சத்திர குடும்பத்தில் 6 கோள்கள் உள்ளது. இதில் ஆறாவது கோளானது HD110067 நட்சத்திரத்தை சுற்றிவர 54 நாட்கள் ஆகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது நாசாவின், NASA's Transiting Exoplanet Survey Satellite (TESS) மற்றும் European Space Agency's CHaracterizing ExOPlanet Satellite (Cheops) என்ற இரு செயற்கைக்கோள்கள் தான்.

இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த HD110067 நட்சத்திரத்தை சுற்றிவரும் கோள்கள் resonance orbit-ஐ கொண்டுள்ளது. அதென்ன resonance orbit என்றால் கோள்கள் நட்சத்திரத்தை சுற்றிவரும் சுற்றுகளின் எண்ணிக்கையும் அமைப்பும்தான். அதாவது நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் முதல் கோள் HD110067-ஐ மூன்று முறை சுற்றிவரும் நேரத்தில் இரண்டாம் கோள் இரண்டு முறை சுற்றி வரும். அதாவது 3:2.

Tracing a link between two neighbour planet at regular time interval along their orbits, creates a pattern unique to each couple. The six planets of the HD110067 system create together a mesmerising geometric pattern due to their resonance-chain.

அதேபோல் இரண்டாவது கோள் HD110067 நட்சத்திரத்தை மூன்று முறை சுற்றி வரும் போது, மூன்றாவது கோள் 2 முறை சுற்றிவரும் அதாவது 3:2 , 3:4, 4:3 இந்த விகிதத்தில் கோள்கள் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

HD 110067

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி ஒரு சூரியகுடும்பம் புதிதாக தோன்றும் சமயம் resonance orbit ல் தான் எல்லா கோள்களும் நட்சத்திரத்தை சுற்ற ஆரம்பிக்கிறது. பிறகு அதன் சுற்றில் மாற்றம் ஏற்பட்டு நாளடைவில் orbit வேறுபாடு ஏற்பட்டு அதன் பாதையை மாற்றிக்கொள்ளும். ஆனால், இந்த HD110067 நட்சத்திர குடும்பமானது நம் சூரிய குடும்பத்தை விட பல பில்லியன் வருடங்கள் பழமையானதாக இருந்தாலும் இதன் resonance orbit தன்மை மாறவில்லை. அதனால்தான் இது புதுமையான, சுவாரசியமான குடும்பம் என்கிறார்கள். இதைப்பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்துக்கொண்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில், இதன் எடை, இதன் அடர்த்தி ஆகியவற்றை பற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.