டெக்

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்

Sinekadhara

விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க விண்கலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களைக் கொண்டுசெல்லும் கார்கோ விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த, நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயரை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் க்ரஹ்மான், என்ஜி - 14 சிக்னஸ் என்ற விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரை சூட்டியுள்ளது.

விண்வெளிக்கு சென்றுவந்த வீரர்களின் பெயரை விண்கலத்திற்கு வைத்து கௌரவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். கல்பனா சாவ்லா விண்வெளி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் மற்றும் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையயும் பெற்றவர்.

முதல்முறை விண்வெளிக்குச் சென்றுவந்த கல்பனா சாவ்லா, 2003ஆம் ஆண்டு மீண்டும் 7 பேர் கொண்ட குழுவுடன் விண்வெளி ஆராய்ச்சிக்காக சென்று 16 நாட்கள் கழித்து திரும்பியபோது நடுவானில் விண்கலம் வெடித்துச் சிதறி பலியானார்.