டெக்

வாங்கும் பொருட்களுக்கு அடுத்த வருடம் பணம் செலுத்தலாம் - அமேசான் அதிரடி

webteam

பொருட்களை தற்போது வாங்கிக்கொண்டு அடுத்த வருடம் பணத்தை EMI மூலம் பணம் செலுத்தலாம் என்ற சலுகையை அமேசான் அறிவித்துள்ளது. 

அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட பிரபல முன்னணி ஆன்லைன் விற்பனை சந்தைகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வகையில், அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்காக அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, தற்போது பொருட்களை வாங்கிக்கொண்டு அடுத்த வருடம் அதற்கான பணத்தை கட்டலாம். ஹெச்.டி.எப்.சி. கிரெடிட் கார்டு மூலம் உடனே பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், அடுத்த வருடம் ஜனவரி முதல் EMI - மூலம் பணத்தை செலுத்தலாம் என அமேசான் அறிவித்துள்ளது. இந்த சலுகை, இன்று முதல் வரும் செப்டம்பர் 30 தேதி வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக, செப்டம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்காக “தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்“ என்ற பெயரில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.