செல்ஃபோன்களின் உதவியால் இவ்வுலகை கைக்குள் கொண்டுவர முடியும் என்றால் அதில் செயலிகளின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு செயலிகள் சந்தையில் நாளுக்கு நாள் புதிய செயலிகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் பார்வையற்றவர்களுக்காக செயலி ஒன்று அறிமுகமாகயுள்ளது.
தொழில்நுட்ப சந்தையில தற்போது ’ஏபாலி’ என்கிற நிறுவனம் பார்வையற்றவர்களுக்காக மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அப்ளிகேஷனை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்க கூடிய பொருள் என்ன என்பதையும், தாங்கள் அறிய விரும்பும் பொருளின் பெயரையும் மொபைல் சொல்ல கேட்ட முடியும்.
அதாவது இந்த ’ஏபாலி’ அப்ளிகேஷன் எதிரே இருக்க பொருளை ஸ்கேன் செய்து அதனுடைய பெயரை துல்லியமாக கொடுக்கும் ஆற்றலோடு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதோடு 7 மொழிகளில் பொருட்களின் பெயரை சொல்லும் வகையில் இது உருவாக்கப்பட்டு உள்ளது. தொழிற்நுட்ப கண்காட்சியில் அறிமுக்கப்படுத்தப்பட்டிருக்ககூடிய இந்த அப்ளிகேஷன் பார்வை குறைபாடு உடையவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் கட்டமா ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட மொபைல் ஃபோனிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்ககூடிய இந்த அப்ளிகேசனானது விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கும் என கூறப்படுகிறது.