வாட்ஸ் அப்பில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விரைவில் விளம்பரங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
உலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கைக்கு சென்ற பிறகு அடுத்தடுத்து புது அப்டேட்களை வழங்கி வருகிறது. அண்மையில் வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர்ஸ்களை அறிமுகப்படுத்தி இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஆட்ஸ் ஃபார் ஸ்டேட்டஸ் என்ற பெயரில் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யும் புதிய வசதியை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதன்படி இதுவரை எந்த லாபமும் இன்றி இலவசமாக சேவைகளை வழங்கிய வாட்ஸ் அப் நிறுவனம் வருவாயைப் பெருக்கும் நோக்கில் ஸ்டேட்டஸ்களில் விளம்பரம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி ஃபேஸ்புக், யூடியூபில் வீடியோக்களுக்கு இடையே விளம்பரங்கள் வருவது போன்று வாட்ஸ் அப்பிலும் விளம்பரங்கள் இடம்பெறும்.