ஆதித்யா விண்கலம்
ஆதித்யா விண்கலம்  இஸ்ரோ
டெக்

சூரியனின் L1 புள்ளியை நோக்கி.. ஆதித்யா L1 விண்கலம் தொடர்பாக முக்கியமான தகவலை வெளியிட்டது இஸ்ரோ!

PT WEB

ஆதித்யா விண்கலம் எல் ஒன் புள்ளியை நோக்கி செல்வதற்கான பாதை மாற்றும் பணிகள் முடிவு பெற்றுவிட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் அனுப்பப்பட்ட ஆதித்யாவின் விண்கலம் கடந்த 37 நாள்களாக சூரியனை ஆய்வு செய்ய L1 புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தை ஹேலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகளை வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் லெகிராஞ்சியன் புள்ளி இருக்கும் நிலையில், அந்த L1 புள்ளியை செங்குத்தாக ஆதித்யா வெண்கலம் சுற்றி வருவது போன்று திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹாலோ சுற்றுப்பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் 6 அன்று 16 வினாடிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

மேலும், இது குறித்து இஸ்ரோ தனது x வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”விண்கலமானது சூரியன்-பூமி எல்1க்கு செல்லும் வழியில் உள்ளது. அக்டோபர் 6, 2023 அன்று சுமார் 16 வினாடிகளில் ஒரு டிராஜெக்டரி கரெக்ஷன் மேனியூவ்ரே (TCM) என்பது நிகழ்த்தப்பட்டது. செப்டம்பர் 19, 2023 அன்று நிகழ்த்தப்பட்ட Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சூழ்ச்சியைக் கண்காணித்த பிறகு ஆராயப்பட்ட பாதையை சரிசெய்யப்பட்டது.

TCM ஆனது L1 சுற்றி ஹாலோ ஆர்பிட் செருகலை நோக்கி விண்கலன் ஆதித்யா-எல்1 தொடர்ந்து முன்னோக்கி நகர்வதால், காந்தமானி சில நாட்களுக்குள் மீண்டும் இயங்கும் விதமாக அமையும்” என்று தெரிவித்துள்ளது.