aditya-l1
aditya-l1 file image
டெக்

சூரியனை வெவ்வேறு வகைகளில் க்ளிக் செய்த ஆதித்யா எல் 1... போட்டோக்களை வெளியிட்ட இஸ்ரோ!

யுவபுருஷ்

நிலவின் தென் துருவத்தை தொட்டுவிட்ட சந்திரயான் - 3 விண்கலத்தின் சாதனையைத் தொடர்ந்து, அடுத்த சாதனையை படைக்க ஆதித்யா எல்.1 என்ற விண்கலத்தை கடந்த செப்.2ம் தேதி விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. பல லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்து எல்.1 என்ற புள்ளியில் நிலைநிறுத்தி, சூரியனின் வெளிப்புரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

அதன்படி, பலகட்ட பயணங்களை மேற்கொண்டு வெற்றிகரமாக பயணித்து வருகிறது ஆதித்யா எல்.1 விண்கலம்.

சமீபத்தில் விண்கலத்தின் 2வது ஆய்வுக்கருவி செயல்பாட்டுக்கு வந்ததாக இஸ்ரோ அறிவித்ததிருந்தது. இந்நிலையில், விண்கலத்தின் SUIT கருவி எடுத்த சூரியனின் புகைப்படங்களை இன்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சூரிய வெப்பத்தில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிரின் அலைநீளங்களை முதல்முறையாக ஆதித்யா எல்.1 படம்பிடித்து அனுப்பியுள்ளது.

விண்கலம் படம்பிடித்த இந்த போட்டோக்கள், சூரியன் குறித்த ஆய்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. சூரிய ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த திட்டம் சுமார் 300 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.