part time job scam web
டெக்

'வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்'.. "Part Time Job App" டவுன்லோடு செய்த பெண்! ரூ.33,000 மோசடி!

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் "பொட்டிக் கடை" வைத்துள்ளார். இந்த நிலையில், வீட்டிலிருந்து மற்றொரு Part Time வேலை செய்யலாம் என அவர் நினைத்துள்ளார். இந்த நிலையில், டெலிகிராம் மூலம் அவருக்கு வீட்டில் இருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற மெசேஜ் வந்துள்ளது.

இதனையடுத்து அந்த லிங்கை பெண் கிளிக் செய்ய whatsapp நம்பரில் இருந்து பார்ட் டைம் ஜாப் தொடர்பாக எதிர்முனையில் இருந்து பேசி "Medline76" என்ற ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யச் சொல்லியுள்ளனர்.

part time job

இந்த ஆப் மூலமாக மொத்தமாக பத்து டாஸ்க்கள் செய்ய வேண்டும் ஒவ்வொரு டாஸ்க்குக்கும் முன்பாக அதனை வாங்குவதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் அதனை விட பன்மடங்காக பணமும் வேலைக்கான ஊதியமும் தரப்படும் என மெசேஜ் செய்து உள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண் ஒவ்வொரு டாஸ்கையும் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.

டாஸ்க் முடித்த போது பறிபோன 33,000!

சில டாஸ்க்களை சேர்த்து மொத்தமாக ரூபாய் 12 ஆயிரத்து 990 பணத்தை செலுத்தி உள்ளார். இதனால், போனஸ் பணமாக ரூபாய் 3200 எதிர்தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய அந்தப் பெண் மொத்தமாக ரூபாய் 33 ஆயிரத்து 770 க்கு டாஸ்க்குகளை வாங்கியுள்ளார். அதன்பின் செக் செய்தபோது போனஸ் தொகை இல்லாமல் போய் உள்ளது. இதனையடுத்து எதிர்முனையில் கேட்டபோது பதில் ஏதும் சொல்லாமல் மேலும் பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர்.

cyber crime

பின்னர் தான் ஆன்லைன் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் இந்தச் சம்பவம் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ராயப்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்