டெக்

23 வருடங்களில் 90 போன்களை சேகரித்த LG போன் காதலர்!

EllusamyKarthik

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக இந்த ஏப்ரலில் தொடக்கத்தில் சொல்லி இருந்தது. இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த LG போன் பிரியர் ஒருவர் 23 வருடங்களில் 90 போன்களை வாங்கி உள்ளார். அதனை பொக்கிஷமாக வைத்து பாதுகாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அவர் பெயர் Ryu Hyun-soo. வயது 53. ‘எனக்கு எல்.ஜி போனில் பிடித்ததே அதன் ஆடியோதான்’ என அவர் தெரிவித்துள்ளார். 

“டிசைன், லுக் மற்றும் ஆப்பிரேட் செய்ய உதவும் சிறப்பம்சங்களும் தான் எல்.ஜி போனில் எனக்கு பிடித்தவை. இவை அனைத்திற்கும் மேலாக அதன் சத்தம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என அவர் சொல்லியுள்ளார். LG போன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அறையையே பிரத்யேகமாக போன் வைப்பதற்கு என மாற்றியுள்ளார் அவர்.