Display இல்லாத ஸ்மார்ட்போனா
Display இல்லாத ஸ்மார்ட்போனா புதிய தலைமுறை
டெக்

என்னது... Display இல்லாத ஸ்மார்ட்போனா? ஹியூமேன் நிறுவனம் அறிமுகம்

PT WEB

நுண்பொருள், மென்பொருள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான Humane நிறுவனம், தற்போது அறிமுகம் செய்துள்ள Display இல்லாத முதல் ஸ்மார்ட்போன் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

AI Pin என்ற இந்த ஸ்மார்ட்போன், செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர்
மற்றும் பேட்டரி பூஸ்டர் என்ற இரு பாகங்களுடன் இந்த AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. Display இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை, உடையில் அணிந்துகொண்டு உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பெயர்ப்பாளரைப் போல் இந்த சாதனத்தை நம்மால் பயன்படுத்த முடியும் என இதன் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர். எதிரில் உள்ளவர்கள் நமக்கு தெரியாத மொழியில் பேசினால்,
நாம் பேசுவதை மொழிபெயர்த்து கூறும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கை சைகை வைத்து கட்டுப்படுத்துவது போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை, ப்ரோஜக்டர் மூலம் பயன்படுத்தி, நமது உள்ளங்கையில் தரவுகளை காணும் வகையில் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, நாம் கூறுவதைக் கேட்டு, குறுஞ்செய்தி அனுப்பவும், கால் செய்யவும், புகைப்படம் எடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவுப் பொருட்களை ஸ்கேன் செய்து, அவற்றில் உள்ள கொழுப்பு, புரதம் உள்ளிட்ட சத்துக்களையும், ஒரு நாளில் நாம் எடுத்துக்கொண்ட சத்துக்களையும், அவற்றின் அளவீடுகளுடன் தெரிவிக்கும் வகையில், இந்த AI Pin ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய அம்சமாக, 13 மெகா பிக்சல்ஸ் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சாதனம், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு ஒரு மிகச் சிறந்த சான்று என்றால் அது மிகையல்ல..