டெக்

பூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும் பிரம்மாண்ட விண்கல்..! 

webteam
பூமியின் நீள் வட்டப்பாதையை, பிரம்மாண்ட விண்கல் ஒன்று நாளை கடக்கவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
4 சதுர கிலோ மீட்டர் கனமுள்ள 1998 ஓஆர் 2 என்ற பிரம்மாண்ட விண்கல், பூமியின் வட்டப்பாதையை, இந்திய நேரப்படி நாளை மதியம் 2:26 மணிக்குக் கடக்கவுள்ளதாக, வேணு பாப்பு வான் இயல் ஆய்வக விஞ்ஞானி முத்து மாரியப்பன், கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
 
 
பூமியிலிருந்து 62 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில், ஓஆர் 2 விண்கல்லானது, கிழக்கு வானில் கடக்கவுள்ளதாகவும், பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவை விட, 16மடங்கு அதிகம் கொண்ட பாதுகாப்பான தொலைவில் இந்த விண்கல் கடப்பதால்,பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அவர் தகவல் அளித்துள்ளார்.
 
 
சூரியனை  3 வருடம் 8 மாதத்தில் சுற்றி வரும் இந்த ஓஆர் 2 விண்கல், எவரெஸ்ட் சிகரத்தின் மொத்த அளவில்,  மூன்றில் இரண்டு மடங்கு பெரியது என்றும், பூமியின் ஈர்ப்பு விசையால், எதிர்காலத்தில் விண் கல்லின் சுற்று வட்டப்பாதையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், விஞ்ஞானி முத்து மாரியப்பன் தகவல் அளித்துள்ளார். இந்த விண்கல் பூமியின் சுற்று வட்டப்பாதையைக் கடப்பதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.