டெக்

உணர்ச்சியுள்ள ரோபோ! 13 வயதேயான சென்னை பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!

webteam

சென்னையை சேர்ந்த 13 வயதுடைய பள்ளி மாணவன் ப்ரதீக், உணர்வுகளுடன் கூடிய ரோபோவை கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோ மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் சிறப்பம்சமாக, கேள்வி கேட்கும் போது மனிதர்கள் ரோபோவை திட்டினால், அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை அந்த ரோபோ பதிலளிக்காது.

மேலும் மனிதர்கள் சோகமாக இருந்தால் கூட ரோபோவால் புரிந்துகொள்ளவும் முடியும் என தெரிவித்துள்ளார் மாணவன் ப்ரதீக். எந்திரன் படத்தில் காட்டப்படும் சிட்டி ரோபோவை போல உணர்ச்சியுள்ள ரோபோவை கண்டுபிடித்து பள்ளி மாணவன் அசத்தியுள்ளார்.