டெக்

தேவையற்ற கவலைகள் வேண்டாம்; 5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது எனத் தகவல்

தேவையற்ற கவலைகள் வேண்டாம்; 5ஜி தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது எனத் தகவல்

EllusamyKarthik

5ஜி தொழில்நுட்பம் ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்கும் என்பது தவறானவை. இதன் கதிர்வீச்சு பல்வேறு பாதகங்களை கொடுக்கும் என சிலர் தேவையற்ற கவலைகளை கொண்டுள்ளனர். இது மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷனின் பொது இயக்குனர் எஸ் பி கோச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் ஒவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது அதோடு சேர்ந்து இது மாதிரியான வதந்திகளும் பரவும் என அவர் தெரிவித்துள்ளார். 

5ஜி இணைய சேவையை கொண்டு வருவதன் வாயிலாக தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 100 மடங்கு கதிர்வீச்சு வெளிப்படும். இதன் மூலம் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இது மனிதர்களை பேராபத்திற்கு இட்டுச்செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா  இன்று  வழக்கு தொடுத்திருந்தார். இருப்பினும் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதற்கு முன்னதாக ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகரில் கொரோனா பரவலுக்கு 5ஜி சோதனை ஓட்டம் காரணம் என சொல்லப்பட்டது.