டெக்

மகளிர் உலகக் கோப்பை: சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம்!

EllusamyKarthik

நியூசிலாந்து நாட்டின் பே ஓவல் மைதானத்தில் இன்று 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடர் ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் தொடக்கத்தை குறிப்பிடும் வகையில் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கடந்த 1844-இல் கனடா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடின. 1973-இல் முதல் மகளிர் உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்டது. முதல் எடிஷனை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வென்றிருந்தது. 

இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் கூகுள் வாழ்த்து சொல்லியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த டூடுலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கொடுக்கப்பட்டது. 

இந்த டூடுலை கிளிக் செய்தால் சிகப்பு நிற கிரிக்கெட் பந்துகள் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக செல்வதை பார்க்க முடிகிறது.