டெக்

தகவலை திருடும் 42 சீன ஆப்கள்.....எச்சரிக்கை ரிப்போர்ட்

தகவலை திருடும் 42 சீன ஆப்கள்.....எச்சரிக்கை ரிப்போர்ட்

webteam

சீன ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் சீன ஆப்கள் மூலம் இந்தியர்களின் தகவல்களை சீனா திருடுவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

இந்தியா-சீனா இடையிலான எல்லை குறித்த தகவல்களை திருடுவதற்கு ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்களை சீனா பயன்படுத்துவதாக இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே சீன ஸ்மார்ட் போன்கள் மற்றும் சீன மொபைல் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லையில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்திய உளவுத்துறை அவ்வாறு குறிப்பிட்டுக் கூறும் மொபைல் ஆப்கள் இந்தியர்களின் ஸ்மார்ட்போன்களில் முக்கிய பயன்பாட்டில் உள்ளது. அந்த 42 ஆப்கள் இவைதான்: 

  1. வொய்போ
  2. வீ சேட்
  3. ஷர் ஹிட்
  4. ட்ரூ கால்லர்
  5. யூசி நியூஸ்
  6. யூசி ப்ரோஸர்  
  7. ப்யூடி ப்ளஸ்
  8. நியூஸ் டாக்
  9. விவாவீடியோ க்யூ வீடியோ இங்க்
  10. பேரல்லெல் ஸ்பேஸ்
  11. ஏயூபிஎஸ் ப்ரோஸர்  
  12. பெர்ஃபெக்ட் கார்ப்
  13. வைரஸ் க்ளினர் (ஹய் செக்யூரிடி லேப்)
  14. சிஎம் ப்ரோஸர்  
  15. எம்ஐ கம்யூனிடி (ஜியோமி)
  16. டியூ ரெகார்டர்
  17. வோட்ல்-ஹைட் 
  18. யூ கேம் மேகெப்
  19. எம்ஐ ஸ்டோர்
  20. காச் க்ளியர் டியூ ஆப்ஸ் ஸ்டுடியோ
  21. டியூ பேட்டரி சேவெர்
  22. டியூ க்ளினர்
  23. டியூ ப்ரைவெசி
  24. டியூ ப்ரோஸர்  
  25. 360 செக்யூரிடி
  26. க்ளின் மாஸ்டர்
  27. பாய்டூ ட்ரன்ஸ்லேட்
  28. பாய்டூ மேப்
  29. வொண்டர் கேமரா
  30. இஎஸ் ஃபைல் எக்ஸ்ப்லோரெர் 
  31. போட்டோ வொண்டர்
  32. க்யூக்யூ இண்டெர்நெஷனல் 
  33. க்யூக்யூ மியூசிக்
  34. க்யூக்யூ மெய்ல்
  35. க்யூக்யூ ப்ளேயர்
  36. க்யூக்யூ நியூஸ் ஃபீட்
  37. க்யூக்யூ செக்யூரிடி செண்டர்
  38. க்யூக்யூ லாஞ்சர்
  39. வீ சின்க்
  40. செல்ஃபி சிடி
  41. எம்ஐ விடியோ கால் (ஜியோமி)
  42. மெய்ல் மாஸ்டர்

ராணுவ வீரர்கள் மட்டுமல்ல மொபைல் பயன்பாட்டர்கள் அனைவருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.