ரசிகர்கள் ரகளை pt desk
தமிழ்நாடு

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை திரையிட கோர்ட் தடை – தியேட்டர் முன்பு ரசிகர்கள் ரகளை

நடிகர் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த திரைப்படம் திரையிடப்படாததால் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் ரகளை.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

. நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க காத்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை திரையிட டெல்லி உயர் நீதிமன்றம் 4 வாரம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக திரையரங்குகளில் இன்று திரைப்படம் வெளியிடாமல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள வள்ளுவர் திரையரங்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் தங்களின் தலைவர் விக்ரம் படத்தை உடனடியாக திரையிட வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கு முன்பு ஒன்று கூடி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.