தமிழ்நாடு

ராயபுரத்தை அச்சுறுத்தும் கொரோனா.. சென்னையில் எங்கெல்லாம் பாதிப்பு தெரியுமா..?

ராயபுரத்தை அச்சுறுத்தும் கொரோனா.. சென்னையில் எங்கெல்லாம் பாதிப்பு தெரியுமா..?

webteam

சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

வட சென்னை பகுதியான ராயபுரத்தில், நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 63 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திரு.வி.க நகரில் 26 பேருக்கும், அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் தலா 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 17 பேரும், தேனாம்பேட்டையில் 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 6 பேருக்கும், வளசரவாக்கம், திருவொற்றியூர் பகுதிகளைச் சேர்ந்த தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கும் தொற்று உள்ளது. மேலும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 8 பேருக்கும் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 199 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.