தமிழ்நாடு

கிராமத்தில் பள்ளி தொடங்கியுள்ள சோஹோ நிறுவனர் வேம்பு.!

Sinekadhara

சோஹோ நிறுவனரும், கோடீஸ்வரருமான ஸ்ரீதர் வேம்பு, இந்த ஊரடங்கு நேரத்தில் தமிழ்நாட்டின் தென்காசியில் உள்ள மத்தளம்பாறை என்ற கிராமத்தில் ஒரு பள்ளியை ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பள்ளியானது, தன்னை ஒரு தீவிரமான திட்டத்தில் இறங்க தூண்டியுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் பாரம்பரிய உடை அணிந்து எளிமையாக சைக்கிளில் செல்லும் அவர், அந்தப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

6 மாதங்களுக்கு முன்பாக மூன்று மாணவர்களுக்கு வீட்டிலேயே வைத்து 3 மணிநேரம் டியூஷன் எடுக்க ஆரம்பித்ததுதான் தற்போது 4 ஆசிரியர்கள், 52 மாணவர்கள் கொண்ட பள்ளியாக உருவாகி உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர்களுக்கு உணவுடன் கூடிய கல்வி வழங்கிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தான் தொடங்கியுள்ள அந்தப் பள்ளியை சிபிஎஸ்சி அல்லது வேறு எந்த இணைப்புடனும் இணைக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த பள்ளிக்கு அரசின் ஒப்புதல்களைப் பெற ஆவணங்களை தயார்செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.