TTF வாசன் pt desk
தமிழ்நாடு

திருப்பதி மலையில் வீடியோ எடுத்த விவகாரம் - யூ-ட்யூபர் TTF வாசனின் வங்கிக் கணக்கு முடக்கம்

திருப்பதி மலையில் வீடியோ எடுத்து விவகாரத்தில் பிரபல யூட்யூபர் TTF வாசனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. திருமலை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: நரேஷ்

திருப்பதி மலைக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வந்திருந்த பிரபல யு டியூப்பர் TTF வாசன் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்ததை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

TTF Vasan

இந்த விவகாரம் தொடர்பாக திருமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவருடைய வங்கிக் கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக வாசனின் வழக்கறிஞர் முத்து, திருப்பதி மலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

TTF வாசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் அவர் கூறினார்.